ADDED : ஜூன் 23, 2026 10:02 PM
பாகூர்: பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியில், புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
போதையில்லா புதுச்சேரி புகையிலை இல்லா புதுச்சேரி என்ற தலைப்பில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை பள்ளி துணை முதல்வர் சுதா தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் அமலி, கணக்குப்பதிவியல் விரிவுரையாளர் தனுஷ் ஆகியோர் நோக்கவுரையாற்றினர். ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். விரிவுரையாளர்கள் சிவசுப்ரமணியம், யோகேஸ்வரி, ரேவதி, அகிலா, ஆசிரியர்கள் சுதா, ராஜலக்ஷ்மி, சாந்தி, உடற்பயிற்சி ஆசிரியை சந்தியா ஆகியோர் ஊர்வலத்தை வழி நடத்தினர்.
பள்ளியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் குருவிநத்தம் பெரியார் நகர், குருவிநத்தம் மெயின் ரோடு வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
