தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 4 பேரிடம் ரூ. 30 ஆயிரம் மோசடி

4 பேரிடம் ரூ. 30 ஆயிரம் மோசடி

4 பேரிடம் ரூ. 30 ஆயிரம் மோசடி


ADDED : ஜூலை 09, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேர் மோசடி கும்பலிடம் ரூ.30 ஆயிரம் இழந்துள்ளனர். 

புதுச்சேரி, மூகாம்பிகை நகரை சேர்ந்த பெண்ணை தொடர்பு கொண்ட மர்மநபர், தன்னை புத்தக வியாபாரி என அறிமுகப்படுத்தி கொண்டு பேசினார். அப்போது, முன்பணம் செலுத்தினால், குறைந்த விலையில் புத்தகம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அப்பெண் 2 தவணைகளாக ரூ.1,535 அனுப்பியும், புத்தகம் ஏதுவும் அவருக்கு வரவில்லை. பின், பணத்தை திரும்ப கேட்டபோது, மர்மநபர் அனுப்பிய பணத்தை விட 10 மடங்கு கூடுதல் பணம் கேட்டுள்ளார். அதன் பிறகே மர்மநபரிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. 

இதேபோல், வில்லியனுாரைச் சேர்ந்தவர் 21 ஆயிரத்து 208, முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் 5 ஆயிரம், நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் 2 ஆயிரம் என 4 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 29 ஆயிரத்து 743 இழந்துள்ளனர். 

இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us