/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
4 பேரிடம் ரூ. 3.34 லட்சம்'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
/
4 பேரிடம் ரூ. 3.34 லட்சம்'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
4 பேரிடம் ரூ. 3.34 லட்சம்'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
4 பேரிடம் ரூ. 3.34 லட்சம்'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
ADDED : செப் 18, 2024 05:23 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் 4 பேரிடம் 3.34 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா. இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என, கூறினர். அதை நம்பி, அவர் 97 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.
அதே போல், காரைக்கால் முல்லை நகரை சேர்ந்த பாலமுருகன் என்பவர் 2.06 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சந்திரபிரகாஷ். இவரின் வாட்ஸ் ஆப் மூலம் ஒரு செயலி வந்தது. அதை பதிவிறக்கம் செய்து, வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்தார். அவரது கணக்கில் இருந்து 17 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
மேலும், புதுச்சேரியை சேர்ந்த ராஜலட்சுமி, லேப் டாப் வாங்க ஆன்லைன் மூலம் 14 ஆயிரம் ரூபாய் அனுப்பினார். பல நாட்கள் ஆகியும் லேப்டாப் வரவில்லை.
இதுகுறித்து, நால்வரும் கொடுத்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்லை தேடி வருகின்றனர்.

