/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை காட்டி மிரட்டிய 4 வாலிபர்கள் கைது
/
கத்தியை காட்டி மிரட்டிய 4 வாலிபர்கள் கைது
ADDED : மே 23, 2024 12:14 AM
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் சாலையோரத்தில் இரண்டு வாலிபர்கள் கத்தியுடன் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.
அதையடுத்து, போலீசார் அந்த வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், பூரணாங்குப்பத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 24, இடையார்பாளையத்தை சேர்ந்த தமிழரசன், 23; என தெரியவந்தது. இருவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
அதே போல, புதுச்சேரி பூமியான்பேட்டை பகுதியில், இரண்டு பேர் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி வருவதாக வந்த தகவலை அடுத்து, ரெட்டியார்பாளையம் போலீசார் அங்கு கத்தியுடன் நின்ற வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில், பாவாணர் நகரை சேர்ந்த கிரி, 22; விக்னேஷ், 20 என தெரியவந்தது. இருவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

