/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிக விபத்து நடக்கும் 40 'பிளாக் ஸ்பாட்ஸ்' போலீசார் எச்சரிக்கை பலகை அமைப்பு

ADDED : ஜூன் 25, 2024 05:05 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் அடிக்கடி விபத்து நடக்கும் 40 பிளாஸ்க் ஸ்பாட்ஸ் பகுதிகளை விபத்து பகுதியாக போக்குவரத்து போலீஸ் அறிவித்துள்ளது.
சின்னஞ்சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட அதிகமாக, 15 லட்சம் வாகனங்கள் சாலையில் ஓடுகிறது.
புதுச்சேரி நகர மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளும் பெருகி விட்டதால், சாலையை அகலப்படுத்த முடியவில்லை.
தற்போது பயன்பாட்டில் உள்ள சாலைகள் பாதுகாப்பான சாலையாக மாற்றி சாலை மேம்பாட்டு பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் புதுச்சேரி பிராந்தியத்தில் அடிக்கடி விபத்து ஏற்படும் 'பிளாக் ஸ்பாட்ஸ்' இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
டில்லியில் இருந்து வந்த சாலை பாதுகாப்பு குழு நடத்திய ஆய்வில், புதுச்சேரியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழக்கூடிய இந்திரா சிக்னல், ஜிப்மர், மறைமலையடிகள் சாலை, நெல்லித்தோப்பு, ரெட்டியார்பாளையம் என 35 இடங்களும், காரைக்காலில் 5 இடங்கள்'பிளாக் ஸ்பாட்ஸ்'ஆக அடையாளம் காணப்பட்டது.
விபத்து நடைபெறும் என அடையாளம் காணப்பட்ட பகுதியில், போக்குவரத்து போலீஸ் சார்பில், விபத்து பகுதி மெதுவாக செல்லவும் என எச்சரிக்கை போர்டுகள் அமைத்து வருகின்றனர். இப்பகுதியில் எச்சரிக்கை விளக்கு, சாலையில் சமிக்கைகள் அமைக்க வேண்டும்.