/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் பஸ் சக்கரம் உடைந்து விபத்து 40 பயணிகள் உயிர் தப்பினர்
/
தனியார் பஸ் சக்கரம் உடைந்து விபத்து 40 பயணிகள் உயிர் தப்பினர்
தனியார் பஸ் சக்கரம் உடைந்து விபத்து 40 பயணிகள் உயிர் தப்பினர்
தனியார் பஸ் சக்கரம் உடைந்து விபத்து 40 பயணிகள் உயிர் தப்பினர்
ADDED : ஜூலை 30, 2024 05:14 AM
திருபுவனை: திருபுவனை அருகே தனியார் பஸ் முன்பக்க சக்கரம் உடைந்து விபத்திற்குள்ளானது.
மடுகரையில் இருந்து மதகடிப்பட்டு, திருபுவனை வழியாக புதுச்சேரி நோக்கி தனியார் பஸ் ஒன்று 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பஸ்சை மடுகரை புதுநகரை சேர்ந்த டிரைவர் வேலு 30; ஓட்டிச்சென்றார்.
பஸ் நேற்று காலை 6.45 மணிக்கு மதகடிப்பட்டுபாளையம் பிள்ளையார் கோவில் அருகே சென்றபோது பஸ்சின் முன்பக்க சக்கரத்தின் ஆக்சில் உடைந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர்.
பஸ் டிரைவர் சாலையில் சென்ற வாகனங்கள் மற்றும் அருகில் இருந்த மின்மாற்றி மீது மோதாமல் சாதுர்யமாக செயல்பட்டு அங்கிருந்த கழிவுநீர் வாய்க்கால் கட்டையில் மோதி பஸ்சை நிறுத்தினார்.
டிரைவரின் சாமர்த்தி செயலால் பஸ்சில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். பஸ் டிரைவரை பொதுமக்கள், பயணிகள் வெகுவாக பாராட்டினர்.