/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கனகசெட்டிக்குளத்தில் 425 லிட்டர் சாராயம் பறிமுதல்
/
கனகசெட்டிக்குளத்தில் 425 லிட்டர் சாராயம் பறிமுதல்
ADDED : ஏப் 14, 2024 05:04 AM

புதுச்சேரி: தமிழகத்திற்கு கடத்தி செல்ல பதுக்கி வைத்திருந்த 425 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தலுக்கு வாக்காளர்களுக்கு மதுபான விநியோகம், பணம் பட்டுவாடா உள்ளிட்டவற்றை போலீசார் தேர்தல் பறக்கும்படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை கனகசெட்டிக்குளம், பகுதியில் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காலாப்பட்டு சப்இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது, ராகவேந்திரா நகரில் பனைமரங்களின் கீழ் பகுதியில் 25 லிட்டர் கொள்ளவு உள்ள 17 கேன்களில் 425 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 85 ஆயிரம்.
சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் கலால் துறையில் ஒப்படைத்தனர். கலால் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, கேன்களில் சாராயத்தில் அளவுக்கு அதிகமான தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
பறிமுதல் செய்த சாராயத்தை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் புதுச்சேரி சாராயம் வாங்கி அதனை தமிழகத்தில் விநியோகிக்க பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
சாராயத்தை பதுக்கி வைத்திருந்தது யார் என விசாரித்து வருகின்றனர்.

