/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுவர் இடிந்து 5 பேர் பலியான சம்பவம் ஒப்பந்ததாரர், சூப்பர்வைசர் கைது
/
சுவர் இடிந்து 5 பேர் பலியான சம்பவம் ஒப்பந்ததாரர், சூப்பர்வைசர் கைது
சுவர் இடிந்து 5 பேர் பலியான சம்பவம் ஒப்பந்ததாரர், சூப்பர்வைசர் கைது
சுவர் இடிந்து 5 பேர் பலியான சம்பவம் ஒப்பந்ததாரர், சூப்பர்வைசர் கைது
ADDED : ஏப் 02, 2024 04:23 AM
புதுச்சேரி : புதுச்சேரியில், கழிவுநீர் வாய்க்கால் துார் வாரும் பணியின்போது, மதில் சுவர் இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில், ஒப்பந்ததாரர் மற்றும் சூப்பர்வைசர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி, தேங்காய்த்திட்டு, வசந்த் நகர் 3வது குறுக்கு தெரு வழியாக செல்லும் கழிவுநீர் வாய்க்கால் துார் வாரும் பணி நேற்று முன்தினம் நடந்தது.
இப்பணியில், அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம், எரவான்குடி மற்றும் நெட்டலக்குறிச்சி கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
ஒப்பந்ததாரர் வேல்ராம்பட்டு திருமாள் நகர், மோகன், 58; சூப்பர்வைசர் வாணரப்பேட்டை, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த விஜய் ஆனந்த், 52; ஆகிய இருவரும், துார் வாரும் சேற்றை, வாய்க்காலை ஒட்டிய துணை மின் நிலைய வளாகத்திற்குள் மதில் சுவர் அருகே கொட்டுமாறு கூறியுள்ளனர்.
மதில் சுவர் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அதை ஏற்க மறுத்த ஒப்பந்தாரர் மோகன், சூப்பர்வைசர் விஜய் ஆனந்த் ஆகிய இருவரும், தாங்கள் கூறிய இடத்தில் சேற்றை கொட்டுமாறு கூறிவிட்டு சென்றனர்.
அதன்படி தொழிலாளர்கள் வாய்க்கால் சேற்றை அள்ளி மதில் சுவர் பக்கத்தில் கொட்டி வந்தனர்.
காலை 8:00 மணியளவில் வாய்க்கால் ஓரமிருந்த மதில்சுவர் திடீரென இடிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி, ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த தொழிலாளி ஜெய்சங்கர், முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், ஒப்பந்ததாரர் மோகன், சூப்பர்வைசர் விஜய் ஆனந்த் மீது கொடுங்காயம் விளைவித்தல், மற்றவர்கள் உயிர் பாதுகாப்பிற்கு அபாயம் விளைவித்தல், அஜாக்கிரதையால் மரணம் விளைவித்தல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த ஐந்து தொழிலாளர்களின் உடல்கள் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

