தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 5 பேரிடம் ரூ.1.95 லட்சம்  மோசடி 

5 பேரிடம் ரூ.1.95 லட்சம்  மோசடி 

5 பேரிடம் ரூ.1.95 லட்சம்  மோசடி 


ADDED : ஜூன் 17, 2026 05:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 05:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் மோசடி கும்பலிடம் 5 பேர் ரூ. 1.95 லட்சம் இழந்துள்ளனர்.

கணபதிசெட்டிக்குளத்தை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர், இன்ஸ்டாகிராமில் குறைந்த விலைக்கு ஆடை விற்பனை தொடர்பான விளம்பரத்தை பார்த்து, அவற்றை ஆர்டர் செய்தார். இதையடுத்து, அவரை தொடர்பு கொண்ட மர்மநபர் முன்பணம் செலுத்தும்படி தெரிவித்துள்ளார். அதைநம்பி மர்மநபருக்கு ரூ. 1 லட்சத்து 78 ஆயிரம் செலுத்தினார். ஆனால், ஆர்டர் செய்த பொருட்கள் வீட்டிற்கு வரவில்லை. அதன்பின் அந்த மர்மநபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

இதேபோல், கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் 4 ஆயிரத்து 500, அரும்பார்த்தபுரத்தை சேர்ந்தவர் 9 ஆயிரத்து 800, கொசப்பாளையத்தை சேர்ந்த பெண் 2 ஆயிரத்து 200, பெரிய காலாப்பட்டை சேர்ந்தவர் 500 என, 5 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 1 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளனர்.

புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us