தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேசிய பேட்மிண்டன் போட்டிக்கு தேர்வு புதுச்சேரி வீரருக்கு எம்.எல்.ஏ., வாழ்த்து

தேசிய பேட்மிண்டன் போட்டிக்கு தேர்வு புதுச்சேரி வீரருக்கு எம்.எல்.ஏ., வாழ்த்து

தேசிய பேட்மிண்டன் போட்டிக்கு தேர்வு புதுச்சேரி வீரருக்கு எம்.எல்.ஏ., வாழ்த்து


ADDED : ஜூன் 17, 2026 05:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 05:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தேசிய அளவிலான பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க தேர்வான புதுச்சேரி வீரர் பிரஜன், நாராயணசாமி எம்.எல்.ஏ.,வை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பேட்மிண்டன் அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பில், அகில இந்திய அளவிலான பேட்மிண்டன் போட்டி தெலுங்கானாவில் நடந்தது. இப்போட்டியில் புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் புதுச்சேரியை சேர்ந்த வீரர் பிரஜன் ஜோடி முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டம், கோப்பை மற்றும் சான்றிதழ் பெற்று சாதனை படைத்தது.

மேலும், தேசிய அளவிலான பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட 13 வீரர்களில், பிரஜன் முதலிடம் பெற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளார். 

தேசிய அளவில் ​சாதனை படைத்த வீரர் பிரஜன் கோப்பை மற்றும் சான்றிதழ்களுடன் உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ., நாராயணசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாணவரின் சாதனையைப் பாராட்டிய எம்.எல்.ஏ., தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற வாழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us