ADDED : ஜூலை 26, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:புதுச்சேரி இளங்கோ நகரை சேர்ந்தவர் சகன்லால், 47, பேன்சி பொருட்களை விற்கும் கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு 2022ம் ஆண்டு, பொருட்கள் வாங்க சென்ற 12வயது சிறுமிக்கு, சகன்லால் பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த புகாரில், சகன்லாலை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி நேற்று சகன்லாலுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில், ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.