/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாய் கடித்து 6 ஆடுகள் காயம் ஆணையர் விசாரணை
/
நாய் கடித்து 6 ஆடுகள் காயம் ஆணையர் விசாரணை
ADDED : நவ 27, 2024 04:34 AM
திருபுவனை, : திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பத்தில் நாய் கடித்து 6 ஆடுகள் படுகாயம் அடைந்தன.
சன்னியாசிகுப்பம் காலனியில் கூலித்தொழிலாளி கதிர்வேல் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவரது நாய்பட்டியில் புகுந்து கடித்து குதறியதில் 6 ஆடுகள் படுகாயம் அடைந்தன.
இது குறித்து பாதிக்கப்பட்ட கதிர்வேல், தொகுதி எம்.எல்.ஏ., அங்காளனிடம் முறையிட்டார்.இது குறித்து திருபுவனை கால்நடை மருத்துவர் மற்றும் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படி எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டார்.
கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், சன்னியாசிக்குப்பம் சென்று நாய் கடித்த ஆடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கால்நடை மருத்துவர் ஆடுகளை பரிசோதித்து ஊசி போட்டு, மருந்து வழங்கினார்.
குப்புசாமி தான் வளர்க்கும் நாய்களை சரியாக பராமரிக்காததால் தொடர்ந்து ஆடுகளை கடித்து வருவது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து நாய் உரிமையாளர் குப்புசாமிக்கு, கொம்யூன் பஞ்சாயத்து மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வண்ணம் நாய்களை தெருக்களில் திரிய விடக்கூடாது, மீறினால் கொம்யூன்பஞ்சாயத்து சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உதவிப் பொறியாளர் மல்லிகார்ஜூனன், இளநிலை பொறியாளர் பாஸ்கர் உடன் இருந்தனர்.

