/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
6 பேரிடம் ரூ. 3.30 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
/
6 பேரிடம் ரூ. 3.30 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
6 பேரிடம் ரூ. 3.30 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
6 பேரிடம் ரூ. 3.30 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
ADDED : மே 31, 2024 02:26 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 6 பேரிடம் 3.30 லட்சம் ரூபாயை மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுாரை சேர்ந்தவர் நடராஜன். இவரை டெலிகிராமில் தொடர்பு கொண்ட மர்ம நபர், பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என, கூறினார்.
அதை நம்பி அவர், 2.40 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.
தட்டாஞ்சாவடியை சேர்ந்த சீனிவாஸ் என்பவரின், கிரெடிட் கார்டில் இருந்து 18 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
உழவர்கரை சோனியா என்பவரின் கிரெடிட் கார்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாய், சந்தோஷ் கிரெடிட் கார்டில் இருந்து 8 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
மேலும், புதுச்சேரியை சேர்ந்த பாலாஜி என்பவரின் பேஸ் புக்கில் தொடர்பு கொண்ட நபர், உங்களின் நண்பருக்கு அவரச தேவைக்காக பணம் வேண்டும் என, கூறியதை அடுத்து, அவர் 40 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார். சங்கரன் என்பவருக்கு வங்கியில் இருந்து அனுப்பியது போல, குறுந்தகவல் வந்தது.
அந்த லிங்கை கிளிக் செய்தார். அடுத்த நிமிடத்தில், 14 ஆயிரம் பணம் அவரது கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது.
இதுகுறித்த, புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, பணத்தை எடுத்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.