/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'நீதிமன்ற வழக்கு முடிந்ததும் 60 எஸ்.ஐ., பணியிடம் நிரப்பப்படும்' அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

ADDED : செப் 04, 2024 06:59 AM

புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறை செயல்பாடுகள் தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.
இதில் டி.ஜி.பி., ஷாலினி சிங் மற்றும் சீனியர் எஸ்.பி.,கள், எஸ்.பி.,கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின், அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:
சைபர் கிரைமில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் குற்றம் புரிந்த கும்பலை புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அந்த குழுவினருக்கு வாழ்த்துகள். காவல் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது. போதைப்பொருள் தடுப்பில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, குற்றச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க சட்டம் - ஒழுங்கை மேம்படுத்துவது. புதிய காவல் நிலையங்கள் உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரியில் 34 இடங்களில் புதிய போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது. நகரை கண்காணிக்க 17 இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து மிகுந்த இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற வழக்கு முடிந்த பின் 60 சப்இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் நிரப்பப்படும்.
சாலை பாதுகாப்புக்கு ஒரு குழு அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின் கட்டணம் தமிழகத்தைவிட புதுச்சேரியில் குறைவு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.