/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 7 பேர் கைது
/
கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 7 பேர் கைது
ADDED : மார் 22, 2024 05:50 AM

புதுச்சேரி : தட்டாஞ்சாவடி, மார்கெட் கமிட்டி பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருப்பதாக டி.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும், அக்கும்பல் தப்பியோட முயன்றனர்.
அவர்களை போலீசார் விரட்டி பிடித்து விசாரித்தனர். செயின்பால்பேட் மதன், 20; கவுதம், 20; கொட்டுப்பாளையம் சரண், 20; பிரேம்குமார், 19; மடுவுப்பேட் லோகேஷ், 19; முத்தியால்பேட்டை கார்த்தி, 34; அருண்குமார், 23, ஆகியோர் என்பதும், அவர்கள் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி கத்தியுடன் பதுங்கி இருந்ததும் தெரிய வந்தது.
அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்திகளை பறிமுதல் செய்தனர். 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

