/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற 85 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்
/
தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற 85 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்
தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற 85 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்
தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற 85 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்
ADDED : ஏப் 18, 2024 11:34 PM
பாகூர் : புதுச்சேரில் இருந்து தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற 85 லிட்டர் மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இன்று லோக்சபா தேர்தல் நடக்கிறது.
தேர்தலையொட்டி, நேற்று, இன்று, நாளை என, மூன்று நாட்கள் அனைத்து விதமான மதுபான கடைகளும் மூடப்பட்டு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தல் நடைபெறுகிறா என போலீசார் மற்றும் கலால் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பாகூரில் இருந்து தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற 180 மில்லி அளவு கொண்ட 100 சாராய பாக்கெட்டுகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், மணமேடு பகுதி தென்பெண்ணை ஆற்று பகுதி யில் மது விற்பனை செய்த மணமேட்டை சேர்ந்த கலை 38; என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 328 மது பாட்டில்களை (41 லிட்டர்) பறிமுதல் செய்தனர்.
இதேபோல், கிருமாம்பாக்கம் போலீசாரின் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றபோது, தமிழகப் பகுதிக்கு கடத்த முயன்ற 90 மில்லி அளவு கொண்ட 288 மதுபாட்டில்களை (25 லிட்டர்) செய்து, கடலுாரை சேர்ந்த கண்ணதாசன் 24; என்பவரை கைது செய்தனர்.

