/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனிநபர் வருமானத்தில் புதுச்சேரிக்கு 9வது இடம் மாஜி எம்.பி., தகவல்
/
தனிநபர் வருமானத்தில் புதுச்சேரிக்கு 9வது இடம் மாஜி எம்.பி., தகவல்
தனிநபர் வருமானத்தில் புதுச்சேரிக்கு 9வது இடம் மாஜி எம்.பி., தகவல்
தனிநபர் வருமானத்தில் புதுச்சேரிக்கு 9வது இடம் மாஜி எம்.பி., தகவல்
ADDED : செப் 08, 2024 05:42 AM
புதுச்சேரி: தனிநபர் வருமானத்தில் புதுச்சேரி 9வது இடத்தில் உள்ளது என, புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சாலையோர வியாபாரிகளின் உணவுத் திருவிழாவில் பேசிய முதல்வர் புதுச்சேரியில் தனிநபர் வருமானம் ரூ.2. 75 லட்சமாக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி தனிநபர் வருமானத்தில் முதலிடம் பெறும் மாநிலமாக உள்ளது என, கூறியிருக்கிறார். இந்த தகவல் உண்மை அல்ல. புதுச்சேரியின் தனிநபர் வருமானம் ரூ. 2.75 லட்சம் என்பது தான் உண்மை.
தனிநபர் வருமானத்தில் முதலிடம் பெறும் மாநிலம் கோவா தான். புதுச்சேரி ஒன்பதாவது இடத்தில்தான் உள்ளது. கோவாவின் தனிநபர் வருமானம் ரூ. 5.33 லட்சம். இது புதுச்சேரியை விட இரு மடங்கு அதிகம்.
தனிநபர் வருமானம் என்பது மாநில மொத்த வருமானத்தை மொத்த மக்கள் தொகையால் வகுக்கும் போது கிடைக்கும் வருமானமாகும்.
இதில், காரைக்கால், மாகி, ஏனம் ஆகிய பிராந்தியங்களின் மொத்த வருமானம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால் அந்த புள்ளிவிபரம் இல்லை. பிராந்திய வருமானங்கள் இல்லாத போது எப்படி மாநில வருமானம் கணக்கிட முடியும். இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.