/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரயில் முன் பாய்ந்து வங்கி ஊழியர் தற்கொலை
/
ரயில் முன் பாய்ந்து வங்கி ஊழியர் தற்கொலை
ADDED : ஜூன் 30, 2024 04:53 AM

அரியாங்குப்பம் : ஸ்டேட் பேங்க் இன்ஸ்சூரன்ஸ் பிரிவில் வேலை செய்த ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி - சென்னை எழும்பூர் வரை செல்லும் விரைவு ரயில், புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து தினமும், காலை 5:35 மணிக்கு புறப்படுகிறது.
நேற்று முன்தினம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில், முதலியார்பேட்டை ஜான்பால் நகர் அருகே சென்றது.
அப்போது மொபைல் போனில் பேசியபடி தண்டவாளத்தில் நின்ற வாலிபர் ஒருவர் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த முதலியார்பேட்டை போலீசார், தற்கொலை செய்து கொண்டவரின் உடலை கைப்பற்றி, வழக்கு பதிந்து விசாரித்தனர். அந்த வாலிபர், புதுச்சேரி சண்முகாபுரத்தை சேர்ந்த அசோக்குமார், 30; எனவும், ஸ்டேட் பாங்கில் இன்ஸ்சூரன்ஸ் பிரிவில் வேலை செய்ததும், திருமணம் ஆகாமல் இருந்த அவர், சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததும் தெரிய வந்தது. அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், வங்கிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
போலீசார் வழக்குப் பதிந்து, தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.