/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறையில் மொபைல்போன் பறிமுதல் தண்டனை கைதி மீது வழக்கு பதிவு
/
சிறையில் மொபைல்போன் பறிமுதல் தண்டனை கைதி மீது வழக்கு பதிவு
சிறையில் மொபைல்போன் பறிமுதல் தண்டனை கைதி மீது வழக்கு பதிவு
சிறையில் மொபைல்போன் பறிமுதல் தண்டனை கைதி மீது வழக்கு பதிவு
ADDED : ஜூலை 20, 2024 04:53 AM
புதுச்சேரி: காலாப்பட்டு சிறையில் மொபைல்போன் பறிமுதல் விவகாரத்தில் தண்டனை கைதி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் 250க்கும் அதிகமாக தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள பிரபல ரவுடிகள் மொபைல்போன் மூலம் வெளியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டி பணம் கேட்பதாக புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து, சீனியர் எஸ்.பி., நாராசைதன்யா உத்தரவின்பேரில், எஸ்.பி.க்கள் வீரவல்லபன், பக்தவாச்சலம், ஜிந்தா கோதண்டராமன், வம்சீதரெட்டி, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், கணேஷ், கார்த்திகேயன், ஜெய்சங்கர், கீர்த்திவர்மன் தலைமையில் 85 போலீசார் கடந்த 17 ம் தேதி அதிகாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை, காலாப்பட்டு சிறைக்குள் சென்று கைதிகள் தங்கியுள்ள அறைகளில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
தண்டனை கைதிகள் பிரிவில் முதலியார்பேட்டை போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற பரமசிவம் (எ) சிவாவிடம் இருந்து ஒரு மொபைல்போன், சிறை கோவில் வளாகம் பகுதியில் ஒரு மொபைல்போனும், தண்டனை கைதிகள் பிரிவில் 3 சார்ஜர், 3 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.