/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., பிரமுகரை துப்பாக்கி முனையில் கடத்தி பணம் நகை பறித்ததாக புகார் காங்., நிர்வாகிகள் உட்பட 10 பேர் மீது 12 பிரிவில் வழக்கு
/
காங்., பிரமுகரை துப்பாக்கி முனையில் கடத்தி பணம் நகை பறித்ததாக புகார் காங்., நிர்வாகிகள் உட்பட 10 பேர் மீது 12 பிரிவில் வழக்கு
காங்., பிரமுகரை துப்பாக்கி முனையில் கடத்தி பணம் நகை பறித்ததாக புகார் காங்., நிர்வாகிகள் உட்பட 10 பேர் மீது 12 பிரிவில் வழக்கு
காங்., பிரமுகரை துப்பாக்கி முனையில் கடத்தி பணம் நகை பறித்ததாக புகார் காங்., நிர்வாகிகள் உட்பட 10 பேர் மீது 12 பிரிவில் வழக்கு
ADDED : மே 20, 2024 05:22 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் காங்., பிரமுகரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று பணம், நகையை பறித்து கொண்டதாக அளித்த புகார் மீது நீதிமன்ற உத்தரவுப்படி, காங்., கட்சி நிர்வாகிகள் உட்பட 10 பேர் மீது 12 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பிருந்தாவனம் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் வினோ, 36; காங்., பிரமுகர். இவருக்கும் காங்., கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளது.
இந்த நிலையில், கடந்த மாதம் 15ம் தேதி இரவு, சென்னை ஆலந்துார் வருண்குமார், 35; என்பவர், கார்த்தி வினோவை காரில் கடத்தி சென்று அரியாங்குப்பம் பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்ததாகவும், வருண்குமாருடன் வந்த இளைஞர் காங்., தேசிய செயலாளர் ஜோஸ்வா ஜெரால்டு, 37; புதுச்சேரி மாநில இளைஞர் காங்., தலைவர் ஆனந்த்பாபு, 35; கண்ணன், 35; சுரேஷ், 35; மற்றும் அடையாளம் தெரியாத 5 பேர் சேர்ந்து கார்த்தி வினோவை தாக்கி துப்பாக்கி காட்டி மிரட்டினர்.
மேலும் அவரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டி, அரியாங்குப்பத்தில் இருந்து திண்டிவனம் அழைத்து சென்று அங்கு ஒன்றரை சவரன் மோதிரம், கைச்சங்கிலியை பறித்து கொண்டு வங்கி கணக்கில் இருந்து ரூ. 89 ஆயிரம் பணம், கையில் வைத்திருந்த ரூ. 10 ஆயிரம் பணம் பெற்று கொண்டு, ரூ. 10 லட்சம் கடன் பெற்றதாக மிரட்டி கையெழுத்து வாங்கியதாக திண்டிவனம் போலீசில் முதலில் புகார் தெரிவித்தார். கடத்தல் அரியாங்குப்பத்தில் நடந்ததால், அரியாங்குப்பம் போலீசில் புகார் அளிக்க அனுப்பினர்.
அரியாங்குப்பம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கார்த்தி வினோ கடத்தி சென்றாக கூறிய இடங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து விசாரித்தபோது, பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.
இதனால் வழக்கு பதிவு செய்ய தாமதம் ஆனது.கார்த்தி வினோ புதுச்சேரி நீதிமன்றத்தில், தன்னுடைய புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க மனுதாக்கல் செய்தார். நீதிமன்றம் கார்த்தி வினோ புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, வருண்குமார், ஜோஸ்வா ஜெரால்டு, ஆனந்த்பாபு, கண்ணன், சுரேஷ் மற்றும் அடையாளம் தெரியாத 5 பேர் உட்பட 10 பேர் மீது, கடத்தல், தாக்குதல், துப்பாக்கி முனையில் மிரட்டல் என 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

