/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இருண்டு கிடக்கும் நான்கு வழிச்சாலை
/
இருண்டு கிடக்கும் நான்கு வழிச்சாலை
ADDED : ஜூலை 11, 2024 06:31 AM
புதுச்சேரி : விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலை பணி நடக்கிறது. இதில், பங்கூரில் இருந்து எம்.என்.குப்பம் வரையிலான சர்வீஸ் சாலையில் தான் அனைத்து வாகனங்களும் செல்லும் நிலை உள்ளது. இதில், பங்கூர் முதல் எம்.என்.குப்பம் வரையிலான சர்வீஸ் சாலையில் அனைத்து மின் விளக்குகளும் எரியவில்லை.
இதனால் சர்வீஸ் சாலை முழுதும் இரவு நேரத்தில் இருண்டு கிடக்கிறது. அதுபோல் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பின் கீழ் உள்ள எம்.என்.குப்பம் முதல் ஆரியப்பாளையம் வரையிலான சாலையோர மின் விளக்குகள், சங்கராபரணி ஆற்று பாலத்தில் உள்ள மின் விளக்குகள் அனைத்தும் பழுதாகி கிடக்கிறது.
இதனால் வடமங்கலம் பகுதியில் இயங்கும் கம்பெனிகளில் பணியாற்றும் பெண்கள் இரவு 10:00 மணிக்கு ஷிப்ட் முடிந்து இச்சாலை வழியாக செல்ல அச்சமடைகின்றனர். எனவே சர்வீஸ் சாலை மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.