தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளியில் முப்பெரும் விழா

அரசு பள்ளியில் முப்பெரும் விழா

அரசு பள்ளியில் முப்பெரும் விழா


ADDED : மார் 22, 2024 10:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2024 10:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் கிளப், கணித ஆய்வகம் துவக்கம் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

தலைமையாசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஆசிரியை ஏஞ்சல் மேரி வரவேற்றார். விழாவில், வகுப்பு வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, கணித ஆய்வகம் மற்றும் சுற்றுச்சூழல் கிளப் திறப்பு விழா நடந்தது. பள்ளி வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆசிரியர் மாணிக்கவேலு தொகுத்து வழங்கினார்.

ஆசிரியர்கள் விஜேஷ், செல்வகுமரன், சடகோபன், முருகன், மோகன், வேலவன், அலுவலக ஊழியர் மாவீரன் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us