/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பூச்சி மருந்து குடித்த கொத்தனார் பலி
/
பூச்சி மருந்து குடித்த கொத்தனார் பலி
ADDED : ஏப் 11, 2024 03:44 AM
திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 54; கொத்தனார். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், இரண்டு மகள்கள் உள்ளனர். சங்கர், கடந்த சில மாதங்களாக குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி புற்றுநோய் காரணமாக ஏற்பட்ட வலியால், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவரை மீட்டு மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சங்கர் இறந்தார்.
புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

