/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடற்கரையில் காவலர் வரைந்த மெகா சைஸ் காமராஜர் ஓவியம்
/
கடற்கரையில் காவலர் வரைந்த மெகா சைஸ் காமராஜர் ஓவியம்
கடற்கரையில் காவலர் வரைந்த மெகா சைஸ் காமராஜர் ஓவியம்
கடற்கரையில் காவலர் வரைந்த மெகா சைஸ் காமராஜர் ஓவியம்
ADDED : ஜூலை 17, 2024 06:14 AM

புதுச்சேரி: காமராஜர் பிறந்த நாளையொட்டி, கடற்கரைச் சாலையில் உதவி சப்இன்ஸ்பெக்டர் வரைந்த காமராஜர் மெகா சைஸ் ஓவியம்பார்வையாளர்களை கவர்ந்தது.
புதுச்சேரி போலீஸ் தலைமையக எஸ்.பி., அலுவலகத்தில் பணியாற்றி வரும் உதவி சப் இன்ஸ்பெக்டர் வினோத், காமராஜர் பிறந்த நாளையொட்டி, கடற்கரை சாலை மேரி ஹால் எதிரில், 16 அடி அகலம், 24 அடி அகலத்தில், மெகா சைஸ் அளவில்காமராஜர் உருவ படத்தைவரைந்துள்ளார்.
14ம் தேதி மதியம் 3:00 மணிக்கு துவங்கி, நள்ளிரவு 12:00 மணி வரை 9 மணி நேரம் செலவிட்டு இப்படத்தைவரைந்து முடித்தார். இதற்காக 8 கிலோ கலர் கோலப்பொடி பயன்படுத்தப்பட்டது. காமராஜர் படத்தை சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா, எஸ்.பி., சுபம்கோஷ் மற்றும் கடற்கரை சாலையில் வாக்கிங் சென்ற பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பார்த்து பாராட்டினர்.
வினோத் கூறுகையில்; 8ம் வகுப்பில் இருந்து படம் வரையும் ஆர்வம் உள்ளது. இதற்கு முன்புநடிகர் அஜித், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், டி 20 உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித்சர்மா கோப்பையுடன் இருக்கும் படங்களை வரைந்துள்ளேன். காமராஜர் மீதுள்ள ஆர்வத்தால் அவரது படத்தை வரைந்தேன்என கூறினார்.