/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உலகை திரும்பி பார்க்க வைத்த மன வளர்ச்சி குன்றிய வீரர்
/
உலகை திரும்பி பார்க்க வைத்த மன வளர்ச்சி குன்றிய வீரர்
உலகை திரும்பி பார்க்க வைத்த மன வளர்ச்சி குன்றிய வீரர்
உலகை திரும்பி பார்க்க வைத்த மன வளர்ச்சி குன்றிய வீரர்
ADDED : ஆக 22, 2024 02:11 AM

திருபுவனை: வாழ்க்கை என்னும் சமுத்திரத்தில் எதிர்நீச்சல் அடித்து உலகின் பார்வையை தன் மீது திருப்பி இருக்கிறார் புதுச்சேரியை சேர்ந்த பவர் லிப்டிங் வீரர் விஷால்,22.
அண்மையில் ஜெர்மனி சிறப்பு ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்ற அவர், நான்கு வெள்ளிகளை குவிக்க, உலகமே விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்தது. பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்தார்.
பள்ளி, மாநிலம், தேசிய அளவில் 50க்கும் மேற்பட்ட பதக்கங்களை அள்ளியுள்ள விஷால், மலேசியாவில் நடந்த ஆசியா பவர் லிப்டிங் போட்டியில் 4 தங்க பதக்கங்களை வென்று உலகை திரும்பி பார்க்க வைத்தார்.
விஷாலில் சொந்த ஊர் மதடிக்கப்பட்டு புது நகர், முல்லை தெரு. தந்தை திருநாவுக்கரசு,53 புதுச்சேரி தீயணைப்பு துறையில் டிரைவர். தாய் சுந்தரி,48, வளவனுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்.
இருவருமே மகனின் வெற்றிக்கு பின்னணியில் இருக்கின்றனர். திருநாவுக்கரசு கூறுகையில், 'சின்ன வயதில் இருந்தே துருதுருவென்று இருப்பான். 7ம் வகுப்பு வரை மற்ற மாணவர்களை போல தான் படித்தான். அதன் பிறகு அவனுடைய போக்கில் மாற்றம் தெரிய வந்தது.
மூளை வளர்ச்சி குறைவாக இருந்தால், சிறப்பு பள்ளியில் சேர்த்தேன். அங்கேயும் படிப்பு வரல. அதனால் நைனார் மண்டபத்தில் உள்ள டே பிரேக்கர் உடற்பயிற்சி கூடத்திற்கு அனுப்பினேன். விஷாலால் எதையும் நீண்ட நேரம் நினைவில் வைத்து கொள்ள முடியாது. தினமும் மதகடிக்கப்பட்டில் இருந்து இருந்து பஸ்சில் ஏறி தனியாக நயினார்மண்டபத்தில் உள்ள டே பிரேக்கர் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சி பெற்று மீண்டும் வீடு திரும்பவதே அவனுக்கு பெரிய கஷ்டம்.
பவர்ஷிப்டிங் பயிற்சி எடுக்கும்போதே, இந்திராகாந்தி திறந்த வெளி பள்ளியில் தான் பத்தாம் வகுப்பும், பிளஸ் 2 முடித்தான். படிப்பு வரலன்னு விளையாட்டு பக்கம் என் பிள்ளையை திருப்பிவிட்டேன். ஆனால் விளையாட்டு இப்போது என் மகனின் படிப்பிற்கான வாய்ப்பினை மீண்டும் தந்துள்ளது. பவர் லிப்டிங் விளையாட்டில் சாதித்ததால், இப்போது சென்டாக் மூலமாக கலிர்தீத்தாள்குப்பம் கருணாநிதி அரசு கல்லுாரியில் பி.பி.ஏ., சுற்றுலா படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது' என்றார்.
விஷால் கூறுகையில், பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என பலரும் வெவ்வேறு தருணங்களில் நாம் உத்வேகத்துடன் செயல்பட உறுதுணையாக இருப்பார்கள். எனக்கு உத்வேகம் என்னுடைய குரு பாக்கியராஜ் தான். அடுத்து, சர்வதேச போட்டியில் தங்க பதக்கம் பெறுவேன் என தன்னம்பிக்கையுடன் கண்சிமிட்டுகிறார்.