/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தந்தை இறந்த சோகத்திலும் 494 மதிப்பெண் பெற்ற மாணவர்
/
தந்தை இறந்த சோகத்திலும் 494 மதிப்பெண் பெற்ற மாணவர்
தந்தை இறந்த சோகத்திலும் 494 மதிப்பெண் பெற்ற மாணவர்
தந்தை இறந்த சோகத்திலும் 494 மதிப்பெண் பெற்ற மாணவர்
ADDED : மே 15, 2024 01:09 AM

புதுச்சேரி : விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரரின் மகன் சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வில் 494 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
முதலியார்பேட்டை சுந்தராஜ வீதியைச் சேர்ந்தவர் அசோக்ராஜ், 43; ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கிரைம் பிரிவு கான்ஸ்டபிள். இவரது மனைவி லதா. அசோக்ராஜ் கடந்த ஆண்டு நவ., 28ம் தேதி, நுாறடிச் சாலையில் பைக்கில் சென்றபோது, தடுப்பு கட்டை மீது மோதி உயிரிழந்தார்.
இவரது மகன் லோகசந்தர், கொம்பாக்கம் அமலோற்பவம் லுார்து அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு முடிவு வெளியானது. தந்தை இறந்த துக்கமான நேரத்திலும், லோகசந்தர் சிறப்பாக படித்து தேர்வு எழுதி, 494 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மாணவர் லோகசந்தர் கூறுகையில், 'என் அப்பா நண்பர் போல என்னுடன் அன்பாக பழகி வந்தார்.
ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என ஆசைப்பட்டார். அவர் ஆசைப்படி ஐ.ஏ.எஸ்., படிப்பேன். பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுப்பதை பார்க்க வேண்டும் என, எதிர்பார்த்து இருந்தார்.
ஆனால், அவர், என்னுடன் இல்லை என, கண் கலங்கி தெரிவித்தார்.

