ADDED : ஜூலை 04, 2024 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி :மேட்டுப்பாளையத்தில் டிப்பர் லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார்.
புதுச்சேரி, சண்முகாபுரம், ராம் நகர், முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மூத்த மகன் குணச்சந்திரன், 28; திருமணம் ஆகவில்லை. கடந்த 1ம் தேதி இரவு சொந்த வேலைக்காக தனது சகோதரர் பல்சர் பைக்கை எடுத்து கொண்டு வெளியே சென்றார். இரவு 10:30 மணிக்கு மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையம் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவ்வழியாக சென்ற லாரி (டி.என்.19.ஏ.சி.7020) பைக் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த குணச்சந்திரன் ஜிப்மர் கொண்டு சென்றபோது உயிரிழந்தார். விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.