ADDED : ஏப் 14, 2024 05:08 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: அதிகமாக குடித்த வாலிபர் மயங்கி விழுந்து இறந்தார்.
பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 32. இவர் மது குடிப்பதற்காக புதுச்சேரி மாநில எல்லைப் பகுதியான மடுகரைக்கு நேற்று முன்தினம் மாலை வந்தார்.
மடுகரையில் அதிகமாக மது குடித்த பாஸ்கரன் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்தார். தகவலறிந்த மடுகரை போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
