/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளம் பெண்ணை மிரட்டிய வாலிபருக்கு வலை
/
இளம் பெண்ணை மிரட்டிய வாலிபருக்கு வலை
ADDED : மே 04, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : இளம் பெண்ணை காதலிக்குமாறு மிரட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோரிமேடு பகுதியை சேர்ந்தவர், 22 வயது இளம்பெண். இவரும், சுப்பையா நகர் கார்த்தி என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் கார்த்தி குடும்பத்தினர், சென்னை கூடுவாஞ்சேரிக்கு சென்றனர்.
அதையடுத்து, கார்த்தி, தனது மொபைல் போன் மூலம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்தார். அவரது மொபைல் அழைப்பை துண்டித்தும், தொடர்ந்து, அவரை அவதுாறாக பேசி மிரட்டினார்.
இதுகுறித்து, இளம்பெண் டி.நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கார்த்தி மீது போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.