/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தற்காலிக பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை
/
தற்காலிக பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை
ADDED : ஆக 19, 2024 05:13 AM
புதுச்சேரி: புதுச்சேரி தற்காலிக பஸ் நிலையத்தில் அடிப்படை வசதி ஏற்படுத்தக் கோரி, பா.ஜ., சமூக ஊடக தலைவர் மகேஷ் நகராட்சி ஆணையர் கந்தசாமியிடம் மனு அளித்தார்.
மனுவில், புதுச்சேரி பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படுவதால், ஏ.எப்.டி., மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இங்கு தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வருகின்றனர்.
தற்காலிக பஸ் நிலையத்தில் சுத்தகரிப்பு குடிநீர் இயந்திரம் செயல்பாட்டில் இல்லை.
தாய்மார்கள் பால் ஊட்டும் அறை மோசமான நிலையில் உள்ளது. கழிவறைகள் மிக குறைவாக உள்ளதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
கழிவறைகளை பாரமரிக்க வேண்டும். மழை, வெயில் காலங்களில் பயணிகள் அமர்வதற்கு கூடுதல் கொட்டகை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைள் வைக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
வளர்ச்சி அடைந்த பாரதம் மாநில அமைப்பாளர் சக்திவேல், பா.ஜ., பிரமுகர் செல்வகுமார், தகவல் தொழில்நுட்ப மாநில செயற்குழு உறுப்பினர் சார்லஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

