/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோவிலில் ஆடி சுவாதி ருத்ர யாக வழிபாடு
/
சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோவிலில் ஆடி சுவாதி ருத்ர யாக வழிபாடு
சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோவிலில் ஆடி சுவாதி ருத்ர யாக வழிபாடு
சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோவிலில் ஆடி சுவாதி ருத்ர யாக வழிபாடு
ADDED : ஆக 11, 2024 05:04 AM

புதுச்சேரி, : மொராட்டாண்டி சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோவிலில், ஆடி சுவாதி ருத்ர யாக வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
வானுார், மொராட்டாண்டி, சங்கிலி நாச்சியார், பரவை நாச்சியார் உடனுறை சுந்தர மூர்த்தி சுவாமிகள் கோவிலில் ஆடி சுவாதி மகா ருத்ர யாக வழிபாடு, நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
அன்றைய தினம் காலை, கணபதி ேஹாமம், லஷ்மி ேஹாமம் உள்ளிட்ட வழிபாடுகளும் நடந்தன.
மாலையில், கலச ஸ்தாபனம், 11 பிரம்மச்சாரி பூஜை, ருத்ர ேஹாமம் ஆகிய பல்வேறு வழிபாடுகள் நடந்தன.
தொடர்ந்து நேற்று காலை மற்றும் மாலையில், வேதபாராயணம், கலச பூஜைகள், சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, ருத்ர ேஹாமம், தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன.
இன்று காலை 7:00 மணிக்கு கலச பூஜை, ருத்ர ேஹாமம், 11 தம்பதிகள் பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடக்கின்றன.
மதியம் 12:00 மணிக்கு கலச அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு, சுந்தரமூர்த்தி சுவாமிகளின் புஷ்ப அலங்கார, பிரகார உலா நடக்கிறது.
தொடர்ந்து, சங்கர நாராயணன், வெங்கடேசன் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடக்கிறது.
இதில், சிவாச்சார்யார்கள், ஆதீன குரு மகா சன்னிதானங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள் ளனர்.

