/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர் பட்டியலில் 400 பேர் நீக்கம் பா.ம.க., வேட்பாளர் சாலை மறியல்
/
வாக்காளர் பட்டியலில் 400 பேர் நீக்கம் பா.ம.க., வேட்பாளர் சாலை மறியல்
வாக்காளர் பட்டியலில் 400 பேர் நீக்கம் பா.ம.க., வேட்பாளர் சாலை மறியல்
வாக்காளர் பட்டியலில் 400 பேர் நீக்கம் பா.ம.க., வேட்பாளர் சாலை மறியல்
ADDED : ஏப் 20, 2024 04:55 AM
மயிலாடுதுறை, : மயிலாடுதுறையில் வாக்காளர் பட்டியலில் 400க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்களுடன் பா.ம.க., வேட்பாளர் சாலை மறியலில் ஈடுபட்டார்.
மயிலாடுதுறை நகராட்சி 16வது வார்டில் 400க்கும் மேற்பட்டோருக்கு பூத் சிலீப் வழங்கவில்லை. அவர்கள் நேற்று ஓட்டு சாவடிக்கு சென்று கேட்டபோது, வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பா.ம.க., வேட்பாளர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்களுடன் ஓட்டுச்சாவடி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் கலெக்டர் சபீர் ஆலம், ஆர்.டி.ஓ., யுரேகா ஆகியோரிடம், கடந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியல்படி ஓட்டு போட சிறப்பு அனுமதி பெற்றுத் தர கோரினர். அதற்கு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திடம் பேசி மாலை 4:00 மணிக்கு பதில் அளிப்பதாக கூறினர். அதனையேற்று மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்நிலையில் மாலை 5:00 மணிக்கு, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் ஓட்டு போட வாய்ப்பில்லை என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்ததால், தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

