/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அபிேஷகப்பாக்கம் ஏரி ஷட்டர் ரூ. 30.35 லட்சத்தில் சீரமைப்பு
/
அபிேஷகப்பாக்கம் ஏரி ஷட்டர் ரூ. 30.35 லட்சத்தில் சீரமைப்பு
அபிேஷகப்பாக்கம் ஏரி ஷட்டர் ரூ. 30.35 லட்சத்தில் சீரமைப்பு
அபிேஷகப்பாக்கம் ஏரி ஷட்டர் ரூ. 30.35 லட்சத்தில் சீரமைப்பு
ADDED : பிப் 15, 2025 05:01 AM

அரியாங்குப்பம் : அபிேஷகப்பாக்கம் ஏரி மதகு ஷட்டர், ரூ. 30.35 லட்சத்தில் புதுப்பிக்கும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
மணவெளி தொகுதி டி. என்.பாளையத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம் ஏரிக்கு செல்லும் ஆத்து வாய்க்காலில் உள்ள 12 கண் மதகு ஷட்டரை, 30.35 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிப்பதற்கான பணி துவக்கப்பட்டது.
இந்த பணியை, சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்டம் மூலம் பழுதடைந்த 12 கண் மதகை சரி செய்து புதிய ஷட்டர் அமைத்து புதுப்பிக்க நடவடிக்கை எடுத்தார். பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட உதவி பொறியாளர் செல்வராசு, இளநிலை பொறியாளர் ஸ்ரீநாத், தொகுதி தலைவர் மனோகர், டி.என்.பாளையம்., கூட்டுறவு கடன் சங்க தலைவர் சுகாதியா முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.