தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்


ADDED : மார் 11, 2025 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2025 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம்- நுாறடிச்சாலை இணைக்கும் புறவழிச்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம் நிலவி வருகிறது. .

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், அரும்பார்த்தபுரம் முதல் இந்திரா சிக்னல் வரையிலான சாலையை அகலப்படுத்தப்படாததால், தினமும் காலை, மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இதை தவிர்க்கும் பொருட்டு, அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து புதுச்சேரி நுாறடிச்சாலையை இணைக்கும் வகையில் 4.5 கி.மீ., துாரத்திற்கு புறவழிச்சாலை (பைபாஸ்) ரூ. 30 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 95 சதவீத பணிகள் முடிந்துள்ளதால் தற்போது வாகன போக்குவரத்து துவங்கியுள்ளது. இந்நிலையில், நுாறடிச்சாலையில் இருந்து அரும்பார்த்தபுரம் செல்லும் புறவழிச்சாலையில் கூட்டம், கூட்டமாக எருமை மாடுகளை சாலைகளை அடைத்தப்படி, சுற்றித் திரிந்து வருகின்றன.

இதனால், அச்சாலையின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் சாலையை கடந்து செல்வதுடன், அடிக்கடி விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர்.

எனவே, நுாறடிசாலை- அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலை வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us