/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம் இடைவெளிகளை மூட நடவடிக்கை தேவை

ADDED : ஏப் 28, 2024 04:44 AM

புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனில் தேவையற்ற இடங்களில் இடைவெளி விடப்பட்டுள்ளதால், சாலையின் குறுக்கே திடீரென புகும் வாகனங்களால் விபத்து அபாயம் எழுந்துள்ளது.
போக்குவரத்து முக்கியத்துவம்வாய்ந்த புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலை சாலையில் விபத்துக்களை தடுக்க, சாலையின் நடுவில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், சென்டர் மீடியனில் முக்கிய சந்திப்புகளை தவிர, மற்ற இடங்களிலும் தேவையற்ற இடைவெளிகள் விடப்பட்டுள்ளது.
இந்த வழிகளில் பைக் ஓட்டிகள் திடீரென குறுக்கே புகுந்து செல்லுகின்றனர். இதனால் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் நொடிக்கு நொடி விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சென்டர் மீடியனில் உள்ள இடைவெளி வழியாக சாலையின் குறுக்காக புகும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இந்த சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்துகளை தடுக்க, சென்டர் மீடியன் அமைத்தால் மட்டும் போதாதது. தேவையற்ற இடங்களில் உள்ள இடைவெளிகளை நிரந்தரமாக மூடினால் மட்டுமே விபத்துகளை தடுக்க முடியும்.