/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆச்சாரியா ஸ்ரீ சம்பூர்ண வித்யாலயம் பள்ளி மாணவர்கள் சாதனை
/
ஆச்சாரியா ஸ்ரீ சம்பூர்ண வித்யாலயம் பள்ளி மாணவர்கள் சாதனை
ஆச்சாரியா ஸ்ரீ சம்பூர்ண வித்யாலயம் பள்ளி மாணவர்கள் சாதனை
ஆச்சாரியா ஸ்ரீ சம்பூர்ண வித்யாலயம் பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : மே 10, 2024 11:41 PM

புதுச்சேரி : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த ஆச்சாரியா ஸ்ரீ சம்பூர்ண வித்யாலயம் பள்ளி மாணவர்களை ஆச்சாரியா கல்வி குழுமத்தின் மேலாண் இயக்குநர் அரவிந்தன் பாராட்டி கவுரவித்தார்.
ஆச்சார்யா ஸ்ரீ சம்பூர்ண வித்யாலயம் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மாணவர் பிரதீப் 500க்கு 489 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றார், மாணவி ஜானவி பிரகல்யா 487 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம், மாணவர்கள் பிரியங்கா, ஆமிரா ஆகியோர் 480 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடம் பிடித்தனர்.
தேர்வு எழுதிய 52 மாணவர்களுள் 450 க்கு மேல் 15 மாணவர்களும், 400க்கு மேல் 31 மாணவர்களும், 48 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை தேடி தந்துள்ளனர்.
மாநில அளவில் சாதித்த மாணவர்களையும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் காயத்ரி ஆகியோர்களை ஆச்சாரியா கல்விக் குழுமத்தின் மேலாண் இயக்குனர் அரவிந்தன் சால்வை அணிவித்து பாராட்டினார்.
மேலும் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அனைத்து மாணவர்களையும் நாம் சாதனையாளர்களாக உருவாக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.