/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நியூ மாடர்ன் வித்யா மந்திர் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை
/
நியூ மாடர்ன் வித்யா மந்திர் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை
நியூ மாடர்ன் வித்யா மந்திர் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை
நியூ மாடர்ன் வித்யா மந்திர் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை
ADDED : மே 08, 2024 03:50 AM

புதுச்சேரி : புதுச்சேரி முத்தியால்பேட்டை நியூ மாடர்ன் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் உயிரியல் மற்றும் வணிகவியல் பாடப் பிரிவுகளில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
பள்ளியளவில் மாணவி ஹரிணி 555 மதிப்பெண்கள் முதலிடமும், மாணவி மித்ரா 537 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவர் லோகேஷ் 525 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர். பள்ளியில் இரண்டு மாணவர்கள் சென்டம் எடுத்துள்ளனர்.
பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள் முதல் வகுப்பு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியில் முதல் மூன்று இடங்களை இடித்த மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் கஸ்தூரி கிரிஷ்டிகுமார் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வாழத்து தெரிவித்தனர்.
இப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சிக்கு உறுதுனையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டார்.