/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாடகைக்கு விடும் டூவீலர்களை சாலையில் நிறுத்தினால் நடவடிக்கை
/
வாடகைக்கு விடும் டூவீலர்களை சாலையில் நிறுத்தினால் நடவடிக்கை
வாடகைக்கு விடும் டூவீலர்களை சாலையில் நிறுத்தினால் நடவடிக்கை
வாடகைக்கு விடும் டூவீலர்களை சாலையில் நிறுத்தினால் நடவடிக்கை
ADDED : செப் 11, 2024 02:47 AM

புதுச்சேரி: புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து பிரிவு சார்பில் இரு சக்கர வாகனம் வாடகைக்கு விடும் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
சீனியர் எஸ்.பி., பிரவீன் குமார் திரிபாதி, எஸ்.பி.,க் கள் மோகன்குமார், செல்வம் தலைமை தாங்கினார்.
இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சுரேஷ்பாபு மற்றும் போக்குவரத்து போலீஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் வாடகை விடும் தொழில் செய்வோர் பங்கேற்றனர். கூட்டத்தில் சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி பேசியதாவது;
சுற்றுலா பயணிகளுக்கு இரு சக்கர வாகனம் வாடகை விடுவோர் போக்கு வரத்து துறையில் அதற்கான பர்மீட் பெற்று இருக்க வேண்டும்.
தங்களின் வாடகை நிலையங்கள் முன்பு சாலையில் பைக்குகளை நிறுத்த கூடாது. குடோன் அல்லது தொழில் செய்யும் இடத்தில் மட்டுமே வாடகை பைக்குகளை நிறுத்த வேண்டும். சாலையில் நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பைக் அல்லது ஸ்கூட்டர் வாடகைக்கு பெற்று ஓட்டும் சுற்றுலா பயணிக்கும், பின்னால் அமர்ந்திருப்பவருக்கு கண்டிப்பாக ஹெல்மெட் வழங்க வேண்டும்.
நகர பகுதியில் ஒரு வழிப்பாதை இருப்பது தெரியாமல் சுற்றுலா பயணிகள் வலம் வருவதால், வாடகைக்கு பைக் பெறும்போதே, ஒரு வழிப்பாதைகள் குறித்த சிறிய குறிப்பேடு ஒன்றும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்க வேண்டும் என கூறினார்.

