/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடங்களில் குப்பைகள் போட்டால் நடவடிக்கை: உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
/
பொது இடங்களில் குப்பைகள் போட்டால் நடவடிக்கை: உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
பொது இடங்களில் குப்பைகள் போட்டால் நடவடிக்கை: உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
பொது இடங்களில் குப்பைகள் போட்டால் நடவடிக்கை: உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
ADDED : மே 22, 2024 06:57 AM
புதுச்சேரி : பொது இடங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், குப்பைகள் போட்டால், அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுவதோடு, நகராட்சி வணிக உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உழவர்கரை நகராட்சியின் முக்கிய சாலை பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், வைத்திருக்க வேண்டும். இந்த நகராட்சிக்கு உட்பட்ட, முதன்மை சாலைகளில் இயங்கும் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங் களில் உருவாகும் குப்பைகளை சாலையோரங்களிலோ அல்லது குப்பைத் தொட்டிகளிலோ போடக்கூடாது.
மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து, பைகளில் சேகரித்து, தங்கள் பகுதிகளில் குப்பை சேகரிக்கும் ஸ்வச்சதா கார்ப்பரேஷன் நிறுவன ஊழியர்களிடம், நேரில் அளிக்க வேண்டும்.
தங்கள் பகுதிகளில், குப்பை சேகரிக்க ஊழியர்கள் சரிவர வரவில்லை என்றாலோ, குப்பைகளை குறித்த நேரத்தில், வாங்காமல் இருந்தாலோ, உடனடியாக, 18004255119 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 7358391404, என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம்.
மேலும், உழவர்கரை நகராட்சி கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0413-2200382 மற்றும் 7598171674 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டால், குப்பைகளை அகற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதனை ஆய்வு செய்ய, நகராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் கொண்ட அமலாக்க குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழுவானது, இன்று முதல் அனைத்து முக்கிய சாலைகளில், ஆய்வு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
மேலும், பொது இடங்களில் குப்பைகளை போடுவதால், நகரின் அழகு சீர்குலைகிறது. எனவே பொது இடங்களில் குப்பை போடுபவர்கள் மீது அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் அனைவரும், உழவர்கரை நகராட்சியுடன் இணைந்து குப்பைகள் போடாமல், சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்துக்கொள்ள உதவ வேண்டும். தவறும் பட்சத்தில், அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுவதோடு, நகராட்சி வணிக உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

