/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனைத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை; முதல்வர் திட்டவட்டம்
/
அனைத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை; முதல்வர் திட்டவட்டம்
அனைத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை; முதல்வர் திட்டவட்டம்
அனைத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை; முதல்வர் திட்டவட்டம்
ADDED : செப் 06, 2024 04:15 AM

புதுச்சேரி ; புதுச்சேரியில் உள்ள அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களை நிரப்ப அரசு கவனம் செலுத்தி வருவதாக, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு, பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர் தின விழா, இ.சி.ஆரில் உள்ள, காமராஜர் மணி மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.
விழாவை முதல்வர் ரங்கசாமி, துவக்கி வைத்து, 21 நல்லாசிரியர்களுக்கான விருதுகளை வழங்கி,
பேசியதாவது:
அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் மாணவர்களை விரும்பி சேர்க்கும் வகையில் பல்வேறு மாற்றங்களை அரசு செய்து வருகிறது. ஸ்மார்ட் வகுப்பறைகள், சுத்தமான, சுகாதாரமான கழிவறை, போதிய இடவசதி செய்துதர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மருத்துவ கல்வியில் 10 சதவீத இடங்கள் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்களுக்கும் மருத்துவ இடங்கள் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். புதுச்சேரியில் படித்து செல்லும் மருத்துவ மாணவர்கள் சிறந்த மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள பொறியியல் கல்லுாரிகளில் படித்த பலர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.
புதுச்சேரயின் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர்கள் உதவுகின்றனர்.
இதனால் தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளது. அரசின் காலி பணியிடங்களை நிரப்புவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
விரைவில் 256 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அனைத்து துறையிலும் காலி பணியிடங்களை நிரப்ப அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஆசிரியர் காலி பணியிடங்களையும் நிரப்பி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கவுரவித்தார்.
விழாவில், செல்வகணபதி எம்.பி., ஜான்குமார் எம்.எல்.ஏ., பள்ளிக்கல்வி இயக்குனர் பிரியதர்ஷினி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.