/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நோணாங்குப்பத்தில் கூடுதல் படகுகள் தேவை
/
நோணாங்குப்பத்தில் கூடுதல் படகுகள் தேவை
ADDED : பிப் 24, 2025 03:43 AM
அரியாங்குப்பம் : நோணாங்குப்பம் படகு குழாமில், போதிய படகு வசதியின்றி, சுற்றுலா பயணிகள் வெகுநேரம் காத்திருந்து சவாரி செய்தனர்.
வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அதிகளவில் கடலுார் சாலையில் உள்ள நோணாங்குப்பம் படகு குழாமிற்கு வந்து, படகு சவாரி செய்கின்றனர்.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில், ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு குழாமில் குவிந்து வருகின்றனர்.
அங்குள்ள பாரடைஸ் பீச்சில், போதிய வசதிகள் இல்லாமல் இருப்பதாக, சுற்றுலா பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில், போதிய படகு வசதி இல்லாமல் இருப்பதால், வெளியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், நீண்ட வரிசையில், வெகு நேரம் காத்திருந்து, படகு சவாரி செய்து வருகின்றனர்.
எனவே, சுற்றுலாத்துறை அதிகாரிகள், படகு குழாமில், கூடுதல் படகுகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

