/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதிப்பெண் அடிப்படையில் நர்சிங் மாணவர் சேர்க்கை பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை
/
மதிப்பெண் அடிப்படையில் நர்சிங் மாணவர் சேர்க்கை பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை
மதிப்பெண் அடிப்படையில் நர்சிங் மாணவர் சேர்க்கை பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை
மதிப்பெண் அடிப்படையில் நர்சிங் மாணவர் சேர்க்கை பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை
ADDED : மே 16, 2024 03:01 AM
புதுச்சேரி: பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் மூலமாக மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என, புதுச்சேரி சென்டாக் மாணவர், பெற்றோர் நலச்சங்க கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து கவர்னர், முதல்வர், தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர் ஆகியோருக்கு சங்கத் தலைவர் நாராயணசாமி அளித்துள்ள கோரிக்கை மனு:
புதுச்சேரி மாநிலத்தில் நர்சிங் படிப்புக்கு பொது நுழைவு தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை ரத்து செய்து, கடந்த ஆண்டு போன்று, இந்திய நர்சிங் கவுன்சிலிடம் விலக்கு பெற்று, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் மூலம் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். இந்திய நர்சிங் கவுன்சில் சட்டம் 1947ஐ ரத்து செய்து, தேசிய செவிலியர் மற்றும் மருத்துவச்சி ஆணைய மசோதா கடந்தாண்டு மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி, வரும் கல்வியாண்டு முதல் தேசிய நர்சிங் மற்றும் மருத்துவச்சி ஆணையம் நடைமுறைக்கு வர உள்ளதால், இந்திய நர்சிங் கவுன்சிலிங் அறிவித்த பொது நுழைவுத் தேர்வு நடத்தி, அந்த மதிப்பெண் அடிப்படையிலான மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற உத்தரவு செல்லத்தக்கதாக இருக்காது.
எனவே, பொது நுழைவுத் தேர்வு அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை ரத்து செய்து, புதுச்சேரியில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நர்சிங் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.