ஐ.ஆர்.பி.ன்., எஸ்.ஐ., பணி தேர்வுக்கான அட்மிட் கார்டு
ஐ.ஆர்.பி.ன்., எஸ்.ஐ., பணி தேர்வுக்கான அட்மிட் கார்டு
ADDED : ஆக 01, 2026 07:51 PM
புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறையில் ஐ.ஆர்.பி.ன்., சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான நுழைவு அட்மிட் கார்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து, புதுச்சேரி ஐ.ஆர்.பி.ன்., காமண்டென்ட் அனிதா ராய் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;
புதுச்சேரி காவல்துறையில் ஐ.ஆர்.பி.ன்., காலியாக உள்ள சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு ஆணை, கடந்த மே 18ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், மொத்தம் 1,871 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
உரிய பரிசீலனைக்கு பிறகு தேர்வுக்கான நுழைவுச் சீட்டு (அட்மிட் கார்டு) நேற்று முதல் பதிவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், உடல் தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு வரும் 13 மற்றும் 14ம் தேதி ஆகிய இரு நாட்கள் புதுச்சேரி கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, விண்ணப்பதாரர்கள் தங்கள் அட்மிட் கார்டை recruitment.py.gov.in இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உடல் தகுதி தேர்வுக்கு வரும்போது, தங்கள் அரசு அடையாள அட்டையை (அசல்) கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
