ADDED : ஆக 01, 2026 08:12 PM
புதுச்சேரி: வாஸ்கோ நிறுவனத்தின் 15ம் ஆண்டு விழாவையொட்டி, வாஸ்கோ 15– பில்டுகான் 2026 நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலையில் உள்ள புல்மேன் ஓட்டலில் நடந்தது.
வாஸ்கோ இயக்குனர் ஆனந்த் தலைமை தாங்கினார். கட்டுமானத் துறையின் முன்னணி பில்டர்கள், ஆர்க்கிடெக்ஸ், ரியல் எஸ்டேட் டெவலெப்பர்கள், கட்டுமான நிறுவனங்கள், பொறியாளர்கள், தொழில்துறை வல்லுனர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு, தொழில்துறை வளர்ச்சி, வணிக ஒத்துழைப்பு மற்றும் எதிர்கால கட்டுமான வளர்ச்சி குறித்து கருத்துகளை தெரிவித்தனர்.
அமைச்சர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கட்டுமானத் துறையில் சிறந்து விளங்கிய முன்னோடிகளுக்கு விருதுகளை வழங்கினார். மேலும் புசிஹன்ட் பிசினஸ் கிளப்– சென்னை சேப்டர் துவக்கி வைக்கப்பட்டது.
தொழில்முனைவோர் மற்றும் வணிக துறையினரிடையே வலுவான தொடர்புகளை உருவாக்குவதும், ‘வலுவான உறவுகளே வெற்றிகரமான வணிகத்தின் அடித்தளம்’ என்ற கொள்கையுடன் இந்த அமைப்பு செயல்பட உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வாஸ்கோ நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
