/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கட்டண உயர்வை ரத்து செய்ய அ.தி.மு.க., அன்பழகன் கோரிக்கை
/
மின் கட்டண உயர்வை ரத்து செய்ய அ.தி.மு.க., அன்பழகன் கோரிக்கை
மின் கட்டண உயர்வை ரத்து செய்ய அ.தி.மு.க., அன்பழகன் கோரிக்கை
மின் கட்டண உயர்வை ரத்து செய்ய அ.தி.மு.க., அன்பழகன் கோரிக்கை
ADDED : செப் 01, 2024 04:02 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என, அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அளித்த மனு; மின்கட்டண உயர்வு அவ்வப்போது ஏற்படுத்தக்கூடிய அவசியமான ஒன்றாக இருந்தாலும், அவை மக்களை பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்வது அரசின் கடமை. மின் கட்டண உயர்வை மக்கள் மீது, திணிக்காமல் பல மாநில அரசுகளே, அந்த தொகையை மானியமாக வழங்கி வருகின்றன.
தற்போது உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை அரசே மானிய உதவி வழங்கி மக்களுக்கு பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். அல்லது அனைத்து தரப்பு மக்களும் உபயோகப்படுத்தும் முதல் 100 யூனிட்டு மின்சாரத்தை இலவச மின்சாரமாக அறிவித்து அதற்கான மானிய தொகையை அரசே ஏற்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில், 4.7 லட்சம் வீட்டு உபயோக மின் இணைப்புகள் உள்ளன. முதல் 100 யூனிட் மின்சார இலவசம் என்றால் அரசுக்கு கூடுதலாக ரூ.120 கோடி செலவாகும். இந்த தொகை அரசுக்கு பெரிய சுமை இல்லை. தமிழகம் போன்று மக்கள் உபயோகப்படுத்தும் முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக ஏற்க வேண்டும். அல்லது உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்' என, கூறியுள்ளார்.
சந்திப்பின்போது, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி உடனிருந்தார்.