தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கேரள துயரத்தில் பங்கேற்க அ.தி.மு.க., நிர்வாகி கோரிக்கை

கேரள துயரத்தில் பங்கேற்க அ.தி.மு.க., நிர்வாகி கோரிக்கை

கேரள துயரத்தில் பங்கேற்க அ.தி.மு.க., நிர்வாகி கோரிக்கை


ADDED : ஆக 02, 2024 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2024 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கேரளா மாநில மக்களின் துயரத்தில், புதுச்சேரி மக்கள் பங்கேற்க வேண்டும் என, அ.தி.மு.க மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரான நிலச்சரிவில் சிக்கி, 250க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். மேலும், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தின் மாகி பிராந்தியம் கேரளா மாநிலம் கண்ணுார் மாவட்டத்தின் அருகில் உள்ளது. இந்தியநாடு இறையாண்மை, சகோதரத்துவத்துத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தின் பெருந்துயரில் புதுச்சேரி மாநிலமும் பங்கேற்று இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். புதுச்சேரி அரசு சார்பில் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்துக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.

கேரள மாநில பெருந்துயரில் பங்கேற்கும் விதமாக, அம்மாநில அரசின் பேரிடர் முதல்வர் நிவாரண நிதிக்காக, ரூ.25 ஆயிரத்தை அனுப்பியுள்ளேன்.

இதேபோல வியாபாரிகள், சமூக அமைப்பினர், அரசு ஊழியர்கள், அரசியல் கட்சியினர், அரசியல்வாதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.,க்கள் என அனைத்து தரப்பு புதுச்சேரி மக்களும் கேரளா மாநில மக்களின் துயரத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us