/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை வஸ்துக்கள் விற்பனையை தடுக்க முதல்வரிடம் அ.தி.மு.க., வலியுறுத்தல்
/
போதை வஸ்துக்கள் விற்பனையை தடுக்க முதல்வரிடம் அ.தி.மு.க., வலியுறுத்தல்
போதை வஸ்துக்கள் விற்பனையை தடுக்க முதல்வரிடம் அ.தி.மு.க., வலியுறுத்தல்
போதை வஸ்துக்கள் விற்பனையை தடுக்க முதல்வரிடம் அ.தி.மு.க., வலியுறுத்தல்
ADDED : மே 18, 2024 06:32 AM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைக்கு, ஹான்ஸ், கூல்லிப் உள்ளிட்ட போதை வஸ்து பாக்கெட்டுகளுடன் வந்த அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார்.
அப்போது, இளைஞர்கள் மாணவர்களை சீரழிக்கும் ஹான்ஸ், கூல்லிப் போன்ற போதை வஸ்துக்கள் சிறிய பெட்டி கடைகளில் விற்கப்படுவதாகவும், அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.
பின், அவர், கூறியதாவது, புதுச்சேரி முழுதும் கஞ்சா, ஹான்ஸ், கூல்லிப், பிரவுன் சுகர் உள்ளிட்ட போதை பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைக்கழகம், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களை குறிவைத்து இந்த போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
நடைபாதை சிறிய பெட்டி கடைகள், ரெஸ்டோ பார்களில் போதை பொருள் விற்பனை செய்கின்றனர். இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். போதை பொருட்கள் விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்தார்.
போலீசாரின் அலட்சிய போக்கு போதை பொருள் விற்பனைக்கு முக்கிய காரணம். சென்னை விமான நிலையத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள போதை பொருள் பார்சல் புதுச்சேரி நபரின் முகவரி பெயரில் அனுப்பட்டுள்ளது. அந்த நபர் யார் என்று கூட புதுச்சேரி போலீசார் கண்டுபிடிக்கவில்லை என கூறினார்.
அப்போது மாநில அவை தலைவர் அன்பானந்தம், பொருளாளர் ரவிபாண்டுரங்கன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி உடனிருந்தனர்.

