ADDED : ஜூலை 01, 2024 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மேட்டுப்பாளையத்தில் மாயமான வாலிபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி சண்முகாபுரம், ஜீவா வீதியைச் சேர்ந்தவர் சுபாஷ், 26; இவரது மனைவி பிரியதர்ஷினி. திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. அரும்பார்த்தபுரத்தில் உள்ள அமெசான் கூரியர் கம்பெனியில் வேலை செய்த சுபாஷ், சமீபத்தில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
சொந்தமாக தொழில் துவங்கி சில நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்தார். கடன் வாங்கிய தொகையை தவறவிட்டுவிட்டதாக கூறி மன வருத்ததில் இருந்து வந்தார். இரண்டு நாளுக்கு முன் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பிரியதர்ஷினி அளித்த புகாரின்பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.