ADDED : செப் 13, 2024 06:51 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: விழுப்புரம் அடுத்த சொரப்பூர் மாரியம்மன் வீதியை சேர்ந்தவர் ஜெயகண்ணன் மகன் சக்திவேல், 20; இவர் நுாறடி சாலை, அண்ணா நகர் பகுதியில் தனது பெற்றோருடன் தங்கி புதுச்சேரியில் வேலை செய்து வருகிறார். கடந்த 2ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
