விளம்பர செய்தி ஏம்பலம் பாலாஜி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
விளம்பர செய்தி ஏம்பலம் பாலாஜி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 22, 2026 11:22 PM
நெட்டப்பாக்கம்: ஏம்பலம் பாலாஜி மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 152 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீதம் தேர்ச்சியை பதிவு செய்தனர். பள்ளியளவில் மாணவிகள் ஹஜிதா, ஹேமமாலினி 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவி சாதனா 492 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவிகள் காயத்திரி, சுஜிதா 490 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றனர்.
பாடவாரியாக ஆங்கிலம் பாடத்தில் ஒரு மாணவரும், அறிவியலில் 4 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். தமிழில் ஒரு மாணவர் 99 மதிப்பெண் பெற்றார். 490 மதிப்பெண்களுக்கு மேல் 5 மாணவர்கள், 480க்கு மேல் 8 பேர், 470 க்கு மேல் 21 பேர், 450 க்கு மேல் 41 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 91 பேர் பெற்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர் யுவராஜ் 600க்கு 588 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் முதலிடம், மாணவி ராகவி 574 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி பாவானா, மாணவர் புஷ்பகரன் ஆகியோர் 566 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். பொதுதேர்வில் சாதித்த மாணவர்களை பள்ளி தாளாளர் அழகப்பன் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வாழ்த்தினார். நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் பாலாஜி சிக் ஷா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகி பாலாஜி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
